Wednesday, December 4, 2013

பாரதியார் பாடல்கள் - சுதந்திர தாகம்


பாரதியார் பாடல்கள்
சுதந்திர தாகம்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

          என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?

          என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?

அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே,

          ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!

வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?

          மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ?              1


பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?

         பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?

தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?


         தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

அஞ்சலென் றருள்செயுங் கடமையில் லாயோ?


         ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?

வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே!

         வீரசிகாமணி, ஆரியர் கோனே!                         2 


No comments:

Post a Comment