கடவுள்
வாழ்த்து
1. ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஆத்தி -
திருவாத்தி பூமாலையை
சூடி -
அணிபவராகிய சிவபெருமான்
அமர்ந்த –
விரும்பிய
Let us glorify the
Super Energy
2. ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
தேவனை -
விநாயகக் கடவுளை
ஏத்தி
ஏத்தி - வாழ்த்தி வாழ்த்தி
தொழுவோம் -
வணங்குவோம்
யாமே -
நாமே.
That people of
renown fantasy
உயிர் வருக்கம்
அ - அறம் செய விரும்பு
நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
Learn to love
virtue
ஆ - ஆறுவது சினம்
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
Control anger
இ - இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு
Don't forget
Charity
ஈ - ஈவது விலக்கேல்
ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
Don't prevent
philanthropy
உ - உடையது விளம்பேல்
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு
சொல்லாதே
Don't betray
confidence
ஊ - ஊக்கமது கைவிடேல்
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது
Don't forsake
motivation
எ - எண் எழுத்து இகழேல்
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை
வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே
Don't despise
learning
ஏ - ஏற்பது இகழ்ச்சி
இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது
Don't freeload
ஐ - ஐயம் இட்டு உண்
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்
Feed the hungry and
then feast
ஒ - ஒப்புரவு ஒழுகு
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்
Emulate the great
ஓ - ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு
Discern the good
and learn
ஒள - ஒளவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே
Speak no envy
ஃ - அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே
Don't shortchange
உயிர்மெய்
வருக்கம்
க - கண்டொன்று சொல்லேல்.
கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
Don't flip-flop.
ங - ஙப் போல் வளை.
'ங' என்னும்
எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
"ங"
என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது
விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும்
எடுத்துக்கொள்ளலாம்.
Bend to befriend.
ச - சனி நீராடு
சனி கிழமைகளில் நீராடு.
Shower regularly.
Shower regularly.
ஞ - ஞயம்பட உரை.
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு
Sweeten your
speech.
ட - இடம்பட வீடு எடேல்.
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே
Judiciously space
your home.
ண - இணக்கம் அறிந்து இணங்கு.
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல
செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
Befriend the best.
த - தந்தை தாய்ப் பேண்.
உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை
அன்புடன் காப்பாற்று.
Protect your
parents.
ந - நன்றி மறவேல்.
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
Don't forget
gratitude.
ப - பருவத்தே பயிர் செய்.
எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
Husbandry has its
season.
ம - மண் பறித்து உண்ணேல்.
பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)
நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு
வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
Don't land-grab.
ய - இயல்பு அலாதன செய்யேல்.
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே
Desist demeaning
deeds.
ர - அரவம் ஆட்டேல்.
பாம்புகளை பிடித்து விளையாடாதே.
Don't play with
snakes.
ல - இலவம் பஞ்சில் துயில்.
'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே
உறங்கு
Cotton bed better
for comfort.
வ - வஞ்சகம் பேசேல்.
கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே
Don't sugar-coat
words.
ழ - அழகு அலாதன செய்யேல்.
இழிவான செயல்களை செய்யாதே
Detest the
disorderly.
ள - இளமையில் கல்.
இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும்,
கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.
Learn when young
ற - அறனை மறவேல்.
தருமத்தை எப்போதும் மறவாமல் செய்
Cherish charity
ன - அனந்தல் ஆடேல்.
மிகுதியாக தூங்காதே
Over sleeping is
obnoxious
No comments:
Post a Comment